தலவாக்கலை பெருந்தோட்ட உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்களுக்கு விசேட பயிற்சி நெறி 

0
616
 இலங்கை தொழில் அமைச்சின் கீழ் இயங்கும்  தொழிலாளர் கற்கை நிலையத்தின் ஊடாக தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் உள்ள 15 தோட்டங்களை சேர்ந்த 300 பேருக்கு   பயிற்சி நெறிகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டு அதில் முதற்கட்டமாக   06 ஆம் 07 ஆம் திகதிகளில்   உத்தியோகஸ்தர்கள்  மற்றும் தொழிலாளர்களுக்கு  மேற்படி பயிற்சி வழங்கப்பட்டதுடன் பங்குபற்றியவர்களுக்கு    சான்றிதழ்கள் வழங்கப்பட்டது .
இதன் இரண்டாம் கட்டமாக 08/09 தலவாக்கலையிலும்
15/16 ஆம் திகதிகளில்  மாத்தறை தெனியான பகுதியிலும்  தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட உத்தியோகஸ்தர்கள் மற்றும் தொழிலளர்களுக்கும் மேற்படி பயிற்சி நெறி முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த பயிற்சி  நெறியானது தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தோட்ட தொழிலாளர் கற்கை நிலையத்தின் பிரதி இயக்குனர் எஸ்.ஏ.டி பிரியந்த குமார் தலைமையிலான  வாளவாளர்களும் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிருவனத்தின் சிரேஸ்ட வளாவாளர்களும் இணைந்து இந்த பயிற்சி நெறியினை முன்னெடுத்ததுடன் தலமைத்துவம், தொழில் சட்டம், கலந்துரையாடல் முக்கியத்துவம் குழு செயற்பாடு, உற்பத்தி திறன் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி நெறிகள் முன்னெடுக்கப்பட்டது .

தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியானது இலங்கையிலுள்ள பிரதான பெருந்தோட்ட கம்பனிகளில் மனித வள அபிவிருத்தி செயற்திட்டங்களை செயற்படுத்துவதில் முதன்மையாக விளங்குவதுடன் பெருந்தோட்ட தொழிலாளர் நலன் நோன்பு செயற்பாடுகள் மற்றும்  பயிற்சிகளும் வருடாந்தம் கிரமமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு முதல் பகுதியில் பல்வேறு வகையான தொழிலாளர்களை பயிற்று விக்கும் ஊக்குவிக்கும் செயற்பாடுகளை கிரமாக செயற்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
S. Ram, HRD Manager, Talawakelle Tea Estates PLC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here