தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு 64 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த சம்வமொன்று இடம்பெற்றுள்ளது.

கந்தானை – கப்புவத்த பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். பெண் ஒருவர் நடத்தும் ஹோட்டலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் உணவு வாங்கிவிட்டு பணம் கொடுத்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் குறித்த நபர் ஹோட்டல் உரிமையாளரின் தந்தையை பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் ராகம பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.