தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘அண்ணா’

0
420

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னணி தமிழக திரை நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமார் ஆகியோரைப் பற்றி பாடல்களை எழுதி, இணையத்தில் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் ‘சிறந்த பாடலாசிரியர்’ என கொண்டாடப்படுபவர் ஈழத்துக் கவிஞர் அஸ்மின்.

“நான்” திரைப்படத்தில் “தப்பெல்லாம் தப்பே இல்லை” பாடலின் மூலமாக நடிகர் விஜய் ஆண்டனி அவர்களால் திரைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர்.

இவர் தற்போது தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,‘ அண்ணா’ எனும் பெயரில் பிரத்யேக பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் சுயாதீன பாடலாக உருவாகியிருக்கும் இந்தப் பாடலை யுகே மாலா குமார் படைப்பகம் எனும் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ வடிவிலான இந்த இசை பாடல் வெளியீடு இன்று உலக இசை தினத்தில் சென்னையில் குமரன் காலனியில் அமைந்துள்ள சிகரம் மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விஜய்யின் ‘அண்ணா’ பாடலை கவிஞர் அஸ்மின் எழுத, ஈழத்து பாடகர் கஜீபன் செல்வம், பின்னணி பாடகி ஸ்ரீநிதி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். பாடலுக்கு சிந்துஜன் வெற்றிவேல் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலுக்கான படத்தொகுப்பை கதிர் ராஜசேகரம் மிகவும் சிறப்பாக செய்துள்ளார்.ஒலிக்கலவையினை ஆர்.கே.சுந்தர் செய்துள்ளார்.

யு கே மாலா குமார் படைப்பகம் சார்பில் தயாரித்துள்ள”அண்ணா” பாடலின் முதல் பார்வையினை தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், “சிவகாசி”,”திருப்பாச்சி” இயக்குனர் பேரரசு, “பகவதி”இயக்குனர் ஏ.வெங்கடேஸ், “தமிழன் “இயக்குனர் மஜீத், கோயமுத்தூர் மாப்பிள்ளை இயக்குனர், நடிகர் சி.ரங்கநாதன், “லவ்டுடே” இயக்குனர் பாலசேகரன், “சுறா”இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார், இயக்குனர் நடிகர், கின்னஸ்பாபு, நடிகர் சம்பத்ராம் ஆகியோர் வெளியிட்டுவைத்தனர்.

அதே போன்று பாடல் அல்பத்தினை “லவ்டுடே” இ்யக்குனர் பாலசேகரன், “சாஜஹான்” இயக்குனர் ரவி,இயக்குனர் ராசய்யா கண்ணன்,இயக்குனர் ஸ்டீபன், இயக்குனர் காவியன், தயாரிப்பாளர் மதுரை செல்வம், “கயல்”திரைப்படம் புகழ் வின்சன் நகுலன் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர்.நிகழ்ச்சியினை இயக்குனர் குணாஜீ சிறப்பாக தமிழ் மணக்க தொகுத்து வழங்கினார்.

‘அண்ணா’ பாடல் குறித்து பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் பேசுகையில், ” ‘அண்ணா’ என்பது தமிழகத்தின் திராவிட அரசியலிலிருந்து பிரிக்க இயலாத உணர்வுடன் கூடிய சொல். ‘அண்ணா’ என்பது உடன்பிறந்த உறவைக் குறிக்கும் உயர்ந்த சொல். இந்த பாடலில் இளைய தளபதி விஜய் அவர்களை ரசிகர்களான தமிழக தமிழர்கள், இந்திய தமிழர்கள், ஈழத் தமிழர்கள், உலக தமிழர்கள் என சர்வதேச அளவிலான தமிழர்களின் பார்வை இந்தப் பாடலில் வரிகளாக இடம்பிடித்திருக்கிறது. விஜய்யை திரையில் தோன்றும் கதாபாத்திரத்தின் ஊடாக ரசிக்கும் ரசனையையும், நிஜவாழ்க்கையில் இளைய தளபதி விஜய் ரசிகர்கள் மீது கொண்டிருக்கும் பேரன்பையும் சம அளவில் ரசிகர்களை ஈர்க்க கூடிய வரிகளின் ஊடாக துள்ளலிசையுடன் இந்தப்பாடல் உருவாகியிருக்கிறது.

தளபதி விஜயின் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக யுகே மாலா குமார் படைப்பகம் சார்பில் வெளியாகியிருக்கும் ‘அண்ணா’ சுயாதீன பாடல் ஒப்பற்ற பரிசாக- கொண்டாடவேண்டிய பாடலாக அமைந்திருக்கிறது.

இலண்டனில் வாழும் தொழிலதிபரும், சமூக சேவையாளருமான மாலா குமார் தனது “மாலா குமார் படைப்பகம்” ஊடாக தமிழ் சினிமாவில் கால் பதித்து சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க இருக்கின்றார்.ஆர்வமுள்ள இயக்குனர்கள் மாலா குமார் படைப்பகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அஸ்மின் தெரிவித்தார்.

விஜயின் புகழையும், சேவையையும் பாராட்டி போற்றி வெளியாகியிருக்கும் ‘அண்ணா’ சுயாதீன பாடல் விஜய்யின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரை இசை ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்பது உறுதி.

பாடல் தயாரிப்பு

U.K.மாலாகுமார் படைப்பகம்

இலண்டன்.

இசை: சிந்துஜன் வெற்றிவேல்

பாடல் வரிகள் : கவிஞர் அஸ்மின்

பாடகர்கள்:

கஜீபன் செல்வம், ஸ்ரீநிதி

படத்தொகுப்பு:

கதிர் ராஜசேகரம்

ஒலிக்கலவை:

ஆர்.கே.சுந்தர்,

சுதர்சன் கிறிஸ்டியன்

ஒளிப்பதிவு: ரெஜிசெல்வராஜா..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here