தாமரைக் கோபுரத்தை பார்வையிடும் நேரங்களில் மாற்றம்

0
154

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையாளர்களுக்காக திறக்கும் நேரம் மீண்டும் திருத்தப்பட்டுள்ளது .

அதன்படி , திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என்றும் பார்வையாளர்கள் இரவு 10 மணி வரை தாமரை கோபுர வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தாமரைக் கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது .

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படும்.

குறித்த இரண்டு நாட்களிலும் இரவு 11 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிட முடியும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here