தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல் – வீடியோ இணைப்பு

0
339

தென் தாய்லாந்தில் இன்று குறைந்தது 17 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்கள் மற்றும் தீச்சம்பவங்களால் 7 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல்கள் நேற்றிரவு முதல் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் சில குண்டு வெடிப்புத் தாக்குதல்கள், சில தீயை ஏற்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

மூன்று மாநிலங்களில் உள்ள அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள், பெற்றோல் நிலையம், ஆகியவற்றைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் பொலிஸாரும் இராணுவமும் வெளியிட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதல்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here