தாய்லாந்து பிரதமர் இடைநிறுத்தம்

0
184

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ சாவை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பதவியிலிருந்து இடை நிறுத்தியுள்ளது.

பதவிக்கால வரம்பின் சட்டப்பூர்வ மறு ஆய்வு முடிவு வரை, அவரை உத்தியோகபூர்வ பணியிலிருந்து நீதிமன்றினால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அந்நாட்டு சட்டத்துக்கமைய, முன்னாள் இராணுவத் தளபதியும், நீண்டகால அரசியல் தலைவருமான, துணைப் பிரதமர் பிரவித் வோங்சுவான் (வயது – 77), இடைக்கால பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here