திங்கட்கிழமை முதல் தனியார் பஸ்கள் சேவை நிறுத்தம்

0
275

அனைத்து தனியார் பஸ்களும் எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சேவையில் ஈடுபடாது என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வாரம் பஸ்களுக்கு டீசல் வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்காவிட்டால்இ திங்கட்கிழமை முதல் தனியார் பஸ் சேவை முழுமையாக நிறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பஸ்களுக்கு டீசல் பெறுவதற்கு பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மூலம் எரிபொருள் வழங்குவதாக கூறப்பட்டாலும்இ அதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here