காலியின் கரையோரப் பகுதியில் உள்ள காலி வீதியில் கடல் அலைகளின் வீரியம் அதிகரித்துள்ளமையினால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சநிலைக்குள்ளாகியுள்ளனர்.

கடல் அலைகள் பெருக்கெடுத்து ஓடுவதால் அம்பலாங்கொடை – மாதம்பே உஸ்முதலாவ சந்தியில் இருந்து தெல்வத்தை வரை காலி வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, புத்தளம், கொழும்பு, காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அடுத்த 24 மணிநேரத்தில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.