தியாகி திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

0
200

மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் தியாகி திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர மேயர், தி.சரவணபவான், பிரதி முதல்வர் ச.சத்தியசீலன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான கி.துரைராஜசிங்கம்,  பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், மௌன அஞ்சலி, ஈகைச் சுடரேற்றல், மலர் மாலை அணிவித்தல்,  மற்றும் அஞ்சலி உரைகளும் இடம் பெற்றன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here