திருமணத்தின் போதே மணமகளை அடித்த மணமகன்

0
268

திருமணத்தின்போது மணப்பெண்ணிடம், விளையாட்டில் தோற்றதால் அவரை அடித்த மணமகன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்கிரித்தனமாக நடந்துகொண்டதாக அவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

மிட்டாய் தாள்களை யார் முதலில் அவிழ்க்கிறார் என்ற விளையாட்டைத் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் மணப்பெண் வெற்றி பெற்றார். கோபமடைந்த மணமகன் மணப்பெண்ணின் தலையின் பின்பக்கத்தில் வேகமாக அடித்தார்.

அந்தச் சம்பவம் ஜூன் 6ஆம் திகதி உஸ்பெக்கிஸ்தானில சூர்கந்தர்யோ என்ற பகுதியில் நடந்தது. அந்தத் தம்பதியிடமும் அவர்களின் பெற்றோரிடமும் சம்பவம் குறித்து பொலிஸார் பேசியதாக அரசாங்க குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

ஊர் மூத்தோர், தம்பதியின் உறவினர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஊர்ச் சந்திப்பில் மணமகன் மணப்பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

திருமண நாளன்றே தம்பதி சமரசம் செய்துகொண்டதாகவும் அவர்கள் தற்போது ஒன்றாக வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here