தீபாவளி திருநாளை முன்னிட்டு ஹட்டன் நகரில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனையை 12/10/2022 புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் நகரில் உணவு பொருட்கள் விற்கப்படும் உணவகங்கள் மற்றும் மலிகை கடைகள் போன்றன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு பாவனைக்கு உட்படுத்தப்பட முடியாத உணவு பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் மீட்கப்பட்டதோடு அவ்வாறு பொருட்களை வைத்திருந்த வியாபார கடைகளுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடலை, பயறு, உழுந்து உட்பட்ட தானியங்களும் அதோடு மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள் பலவற்றை மீட்டுள்ளதோடு அவ்வாறு பதுக்கி வைக்கப்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.