துப்பாக்கிச் சூட்டில் 31 வயது நபர் பலி

0
233

தல்கஸ்வல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். பிடிகல தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டுக்கு அருகில் உள்ள நகருக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நபரை பாழடைந்த பிரதேசத்தில் மறைந்திருந்த நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இவர் சிகிச்சைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வட்டிக்கு பணம் கொடுப்பதாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here