மே மாதம் 30ம் திகதி முதல் நேற்று வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் மாத்திரம் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களிலேயே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு இடையில் காணப்படட மோதல்கள் காரணமாகவே இந்த துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.