தென்கொரியாவிற்கு செல்லவுள்ள 5 ஆயிரம் பணியாளர்கள்

0
171

இவ்வருட இறுதிக்குள் சுமார் 5000 இலங்கை பணியாளர்கள் தென் கொரியாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் ஏற்கனவே சுமார் 3000 பேர் தொழிலில் அமர்த்தப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி யாப்பா தெரிவித்தார்.

இரண்டு வாரத்திற்குள் 200 பணியாளர்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான அனுமதியும் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த வருடத்தில் இரண்டு இலட சத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here