‘தேசபிமானி’ விருது பெற்றார் ஹட்டனைச் சேர்ந்த பொறியியலாளர் சுரேஷ்குமார் பிரஜீவன்

0
699

இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் “NATIONAL PEACE SUMMIT 2022 HONOR AWARDING CEROMONY”  10/09/2022 அன்று பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் ஆளுனர் டாக்டர் இளங்கோகாந்தி, பாரளுமன்ற உறுப்பினர்  முஷாரப், ஜப்பானிய தூதுவர்
நியூலாந்து தூதுவரும் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர் .

இந்த விருது வழங்கும் வைபவத்தில் சமூக செயற்பாடாளர்  சுரேஷ்குமார் பிரஜீவனு க்கு, தேசிய விருதான ‘DESHA ABHIMANI’ விருது பரிந்துரை செய்து வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு அமைச்சின் பிரதான பொறியியலாளராக கடமையாற்றும் இவர், தரம் 1முதல் 13 வரை ஹைலன்ஸ் கல்லூரியின் மாணவனாகவும், பின்பு பொறியியற்துறையில் இளங்கலை, முதுமானிப் பட்டப்படிப்பினை இங்கிலாந்து பல்கலைக்கழகத்திலும் தத்துவமானிப் பட்டத்தினை இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றுக் கொண்டவர். ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின்  பொதுச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here