தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்காக அறவிடப்படும் கட்டணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 13 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வெளியிட்டுள்ளார். 1968 ஆம் ஆண்டின் 32 இலக்க ஆட்கள் பதிவுச் சட்டத்தின் பிரிவு 17 (4)இன் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக அறவிடப்படும் 100 ரூபா கட்டணம், தற்போது 200 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொண்டு புதிதாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட 250 ரூபா என்ற கட்டணம், தற்போது 500 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன தேசிய அடையாள அட்டையை மீளப் பெற்றுக் கொள்வதற்காக அறவிடப்படும் கட்டணம் 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணன்

எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் இத்திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.