தேசிய அடையாள அட்டையின்றி விண்ணப்பிக்க முடியாது

0
254

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவித்தலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் வேறு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தை முன்வைக்கும் விண் ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

எனினும், குறித்த ஆவணத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது என பல் கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் முடிவுகள் இம் மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here