தேன்நிலவுக்கு அவுஸ்திரேலியா செல்லும் 95 வயது தம்பதி

0
251

முதியவர் ஒருவர் தனது 95 ஆவது வயதில் திருமணம் செய்துள்ள நிகழ்வொன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த ஜூலியன் மோயிலே என்பவரேஇ வலேரி வில்லியம்ஸ் என்ற 84 வயதான மூதாட்டியை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். முதியவருக்கு இது முதலாவது திருமணம் என தெரிய வருகிறது.

இந்த ஜோடி தங்களின் தேன்நிலவுக்கு அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலியன் மோயிலே கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் தேவாலயம் ஒன்றில் சந்தித்துள்ள நிலை அண்மையில் குறித்த தேவாலயத்தில் வைத்தே இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வில்இ ஜூலியன் மற்றும் வலேரி சார்பில் சுமார் 40 பேர் வரை கலந்து கொண்டனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here