தேயிலைத்தூள் ஏற்றிச் சென்ற லொறி விபத்து

0
355

கொழும்பு ஏல விற்பனை சந்தைக்கு தேயிலைத் தூளை ஏற்றி சென்ற லொறி, அல்பியன் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த இடத்தில் சென்ற வாகனமொன்றுக்கு இடம்கொடுக்க முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்தாயிரம் கிலோ கிராம் தேயிலைத் தூளை ஏற்றிச் சென்ற நிலையிலேயே குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் சில மணிநேரம் ஹட்டன்- போடைஸ் வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ள அக்கரப்பத்தனை பொலிஸார், லொறி விபத்துக்குள்ளான இடமானது, இலகு ரக வாகனங்கள் மாத்திரம் பயணிக்கும் பகுதி என்றும் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here