தொட்டலங்க , கஜீமாவத்தை மாடி வீட்டு குடியிருப்புத் தொகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 60 வீடுகள் தீக்கிரைக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
நேற்று இரவு ஏற்பட்ட இச்சம்பவத்தில், பெருமளவான பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருவதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.