நடிகை ஹன்சிகா சில தினங்களுக்கு முன்பு தனது வருங்கால கணவர் சோஹைல் கதுரியா என்ற தொழிலதிபரை அறிமுகப்படுத்தினார்.

இவர்களது திருமணம் அடுத்த மாதம் 4ஆம் திகதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை அரண்மனையில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹன்சிகா திருமணம் செய்யவுள்ள சோஹைல் கதுரியா, ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் வைரலாகி வருகிறது.

சோஹைல் கதுரியா, கடந்த 2016ஆம் ஆண்டு ரிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அத்திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரிங்கு, ஹன்சிகாவின் தோழி எனக் கூறப்படுகிறது.

மேலும், ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானியின் திருமணத்தில் சோஹைல் கதுரியாவும் பங்கேற்றுள்ளதாக பேசப்படுகிறது. அவர் ஹன்சிகா மோத்வானிக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குதாரராக இருந்துள்ளார் எனவும் அதே சமயம் ஆடை நிறுவனம் ஒன்றின் உரிமையாளராக உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் சோஹைல் கதுரியா தனது முன்னாள் மனைவியான ரிங்குவை சில காரணங்களால் விவாகரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.