தமிழ் முற்போக்கு கூட்டணியில் பிளவு என்பதில் எவ்வித உண்மையும் இல்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமை பதவியிலிருந்து விலகுவதாக செய்திகள் உலாவுவதையிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதித்தலைவர்களான திகாம்பரம் மற்றும் ராதாகிருஸ்ணன் ஆகியோர் எவ்வித கருத்து முண்பாடுகளும் இன்றி சமூக அக்கரையோடு ஒன்றாய் பயணிக்கின்றனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் சேவையை நல்லாட்சி காலத்தில் மலையக சமூகம் உணர்ந்திருக்கும் அபிவிருத்தியோடு  உரிமைசார் விடயங்களுக்கு குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாது உரிமை சார் விடயங்களை வென்றெடுத்த பெருமை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களை சாரும் என்பதோடு ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறலாம்.
 எனவே,  தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ந்து ஒன்றாய் பயணிக்கும் என்பதோடு கருத்து முரண்பாடுகள் இருப்பினும்   எங்களுடைய தலைமைகள் பேச்சுவார்த்தையின் மூலம்  சுமூக நிலைக்கு வருவார்கள் எனவே தமிழ் முற்போக்கு கூட்டணியை சிதைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களின் கனவுக்கு  .  ஒருபோதும் இடமளிக்கமாட்டாது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Nagulash Media unit