நகர்புற பாடசாலை மாணவர்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் வாய்ப்பு

0
209

நகரங்களில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமது பிரதேசத்திற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் இணைக்குமாறு கோரிக்கை வலு பெறுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலவும் எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து மற்றும் பொருளாதார பிரச்சினை காரணமாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த ஆண்டு இறுதி வரையில் மாத்திரம், குறித்த மாணவர்களை தங்களது இருப்பிடத்துக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் தற்காலிகமாக இணைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதனை, கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகள் தொடர்பான பணிப்பாளர் கித்சிறி லியனகே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here