நகை – பணத்துடன் வீட்டுக்கு வந்த நாய்

0
161

வீட்டிலுள்ள வளர்ப்பு நாய் ஒன்று கவ்விக் கொண்டுவந்த சிறிய பணப்பை ஒன்றில் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட தங்க சங்கிலி ஒன்றும் 7000 ரூபா பணமும் இருந்த நிலையில் அதனை உரியவர்களிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று கண்டி அலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அலதெனிய பொலிஸ் பிரிவில் உள்ள குருந்துகஹமட என்ற இடத்தில் பணப் பை ஒன்றை நாய் ஒன்று கவ்விக் கொண்டு வந்துள்ளது. அந்த பை வீதியோரம் விழுந்திருந்ததாக கூறப்படுகிறது. மேற்படி வளர்ப்பு நாய் அடிக்கடி பாதணிகளை இவ்வாறு கவ்விக்கொண்டு வருமென நாயின் உரிமையாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த நபர் அந்த நாய்கொண்ட வந்த மேற்படி பணப் பையை பரிசீலித்த போது அதில் பணம் மற்றும் தங்கச் சங்கிலி என்பன காணப்பட்டுள்ளள.

மேலும் அந்த பையினுள் காணப்பட்ட தொலை பேசி இலக்கத்திற்கு அழைப்பை எடுத்த போது அது அக்கிராமத்தில் அயலில் உள்ள ஒருவர் என்றும் அவர்களது பணப்பை காணாமல் போனமையும் தெரியவந்துள்ளது.

பின்னர் அலதெனிய பொலிஸ் நிலையத்தில் மேற்படி சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்து பணத்தையும் தங்க நகையையையும் மீள ஒப்படைத்துள்ளனர்.

(கண்டி நிருபர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here