நமிதாவுக்கு இரட்டை ஆண்குழந்தைகள்

0
264

நடிகை நமிதா தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. பிக் பொஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, நமிதா தனது காதலர் வீரேந்திர சௌத்ரியை நவம்பர் 24, 2017-இல் திருமணம் செய்து கொண்டார். நமிதா திருமணத்திற்கு பிறகும் சினிமா வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வந்தார். பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார். அதே நேரத்தில், நமிதா பாஜக-வில் சேர்ந்து அரசியல் பிரவேசம் செய்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க  வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில்தான், நடிகை நமிதா, சில நாட்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். நமிதா திருமணமாகி 5 ஆண்டுகளான நிலையில், தனது 40ஆவது பிறந்தநாளில் தான் கர்ப்பமாக இருப்பதாக நமிதா அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நடிகை நமிதா தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here