பராமரிப்பு நடவக்கைகளுக்காக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி இன்று ( நள்ளிரவு 12 மணி முதல் மூடப்படும் என்று இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த மின் உற்பத்தி நிலையத்தை 75 நாட்களுக்கு மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று மின்சார பொறியியல் சங்கத்தின் பொதுச் செயலாளர் எரங்க குடாஹேவா தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலையின் ‘அலகு 2;’பகுதியே இவ்வாறு மூடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘சுமார் இரண்டு வருடங்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்த போதிலும், கொவிட் நிலைமை காரணமாக சீன நிறுவனத்தால் இலங்கைக்குத் திரும்ப முடியவில்லை. எனவே இரண்டு வருடங்கள் முன்னெடுத்துச் சென்றோம் கட்டாயமாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆகையால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.