நவம்பர் 10 முதல் டிச. 8 வரை வரவு-செலவு திட்ட விவாதம்

0
117

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை, நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்வரும் நவம்பர் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்படவுள்ளது.

நேற்றைய தினம் பாராளுமன்றக் கட்டடத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. 

நவம்பர் 10 முதல் டிசம்பர் 08 வரை வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடத்தப்பட்டு டிசம்பர் (08 ) மாலை வாக்கெடுப்பை நடத்துவது தொடர்பிலும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. 

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவினால் சபையில் முன்வைக்கபட்டமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here