சில எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் இணைந்து எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்க தாம் தயாரென

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் தரப்பிலுள்ள சில தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய மக்கள் சக்தி, முன்னிலை சோசலிசக் கட்சி, தொழிற்சங்கத் தலைவர்கள் சிலர் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற தரப்பினரின் சில பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதுடன் மக்கள் விடுதலை முன்னணி அல்லது அத்தோடு இணைந்த அமைப்புகள் எதுவும் இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளவில்லையென்றும் தெரிய வருகிறது.

அதேவேளை எதிர்வரும் 02ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தை தற்போதுள்ள அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான அரசியல் சத்தியாக்குவதற்கும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.