நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் களஞ்சியப்படுத்தப் பட்டுள்ள எரிபொருள் அளவின் விபரங்களை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார்.

அதற்கமைவாக, இன்று திங்கட்கிழமை நண்பகல், 12.10 மணி நிலவரப்படி பெற்றோல் மற்றும் டீசல் அளவுகள் பின்வருமாறு அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

டீசல் – 14,433 மெற்றிக்தொன், சூப்பர் டீசல் – 58 மெற்றிக்தொன், 92 ஆக்டேன் பெட்ரோல் – 41,978 மெற்றிக்தொன் , 95 ஆக்டேன் பெட்ரோல் – 14, 041 மெற்றிக்தொன் , ஜெட் ஏ1 – 1, 621 மெற்றிக்தொன் என்றவாறு இருப்பதாகவும் இன்று மாலை 06.00 மணியளவில் மற்றுமொரு டீசல் கப்பல் வரவுள்ளதாகவும் தெரிவித்த அவர், சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய உற்பத்தியும் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.