ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் நேற்று இரவுடன் நிறுத்திவைக்கப்பட்டதாக  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க   வெளியிட்டுள்ளார். கூட்டத் தொடர் ஆகஸ்ட் 3 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவதற்கு கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி அண்மையில் அனுமதி கோரியிருந்தார். அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டு, புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும்போது ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை இடம்பெற வேண்டும். ஜனாதிபதியே சம்பிரதாயப்பூர்வமாக சபை அமர்வை ஆரம்பித்து வைப்பார்.