வெளிநாட்டு தபால் கட்டணங்கள் நேற்று 01ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் கட்டணம் அதிகரிப்பு, டொலரின் பெறுமதி, விமானக் கட்டணங்கள், புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கட்டணத் திருத்தங்கள் 04ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போதுள்ள கட்டணத்தை விட இருமடங்காகக் கட்டணங்கள் திருத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.