நுவரெலியா நகரின் மத்தியில் காணப்படும் மணிக்கூட்டு கோபுரத்திலுள்ள க​டிகாரங்கள், நான்கு திசைகளிலும் வெவ்வேறான நான்கு நேரங்களை காட்டுவதால் வெளியிடங்களிலிருந்து நுவரெலியாவுக்குச் செல்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்

நுவரெலியா லயன்ஸ் கிளப்பின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி இந்த மணிக்கூட்டு கோபுரம் 2019 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. அதனை நுவரெலியாக நகர சபை பராமரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் நான்கு திசைகளிலும் உள்ள மணிக்கூடுகள் பத்து நிமிடங்களுக்கு ஒரு தடவை மாறி, மாறி ஓசை எழுப்புவதால், சுற்றுலாப்பயணிகள், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களுக்கு ஒலி அதிர்வுகளை ஏற்படுத்துவதால் பெரும் அசௌகரியத்துக்கு முகம்கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஆகையால், நான்கு திசைகளில் இருக்கும் மணிக்கூடுகளிலும் சரியான நேரத்தை வைத்து சரியான மணித்தியாலத்துக்கு ஓ​சை எழுப்பும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தி.தர்வினேஷ்