மே மாத இறுதி முதல், நான்கு மாத காலப்பகுதிக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தமாக 35 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இந்தக் காலப்பகுதிக்குள் 29 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் 64 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  15 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர்களின் வசமுள்ள ஆயுதங்களை கைப்பற்றுவதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ  சுட்டிக்காட்டியுள்ளார்.