இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச இன்னும் நாட்டில் இருக்கிறார்.  பிபிசிக்கு நான் வழங்கிய பேட்டியில் தவறாக கூறிவிட்டேன் என  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்திய செய்தி நிறுவனமான ANI க்கு தொலைபேசி அழைப்பில் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர் அருகில் உள்ள நாட்டில் இருப்பதாகவும், அவர் புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பிபிசியிடம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.