நாளாந்தம் 25ஆயிரம் எரிவாயு கொள்கல்கள் விநியோகிக்கப்படும்

0
197

கொழும்பில் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 9ஆம் திகதியன்று எரிவாயு கப்பல் வரவுள்ளது. இதனையடுத்து 11ஆம் திகதி முதல் விநியோகம் ஆரம்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து நாளாந்தம் மொத்தமாக 25,000 கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் .

கொழும்பில் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் தலா 100 கொள்கலன்கள் வீதம் 140 இடங்களில் 12.5 கிலோ எடையுள்ள ஒரு இலட்சத்து 40,000 எரிவாயு கொள்கலன்களை விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here