நாளைய வாரம் தனியார் பஸ் வேசைகள் முடங்கும் அபாயம்

0
148

நாடளாவிய ரீதியில் அடுத்தவாரம்; தனியார் பஸ் சேவை முழுமையாக முடங்கக்கூடும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்படும் என தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

இலங்கை போக்குவரத்துச் சபையினால் வழங்கப்படும் டீசல் தற்போது பற்றாக்குறையாக உள்ளது. டீசல் இன்மையால், பெருமளவான பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை.

இதேநேரம், அடுத்த வாரத்தில், பாடசாலை போக்குவரத்து சேவைகளும் தடைப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் மலஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

டீசலைப் பெற்றுக்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கின்றமையினால், இதன் காரணமாக பாடசாலை போக்குவரத்து சேவையிலிருந்து பலர் விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here