நாளை மறுதினம் பதவி விலகல்; பிரதமருக்கு ஜனாதிபதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு

0
138

உறுதியளித்தபடி நாளை மறுதினம் தான் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இந்த விடயத்தை பிரதமரின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியதை அடுத்து, 13 ஆம் திகதி தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதனை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here