தனியார் பஸ் சேவைகள் நாளை முதல் 50 வீதம் குறைவடையும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுஇதனைத் தெரிவித்தார்.

கடந்த மூன்று நாட்களாக இ.போ.சபை டிப்போக்களில் இருந்து முறையாக டீசல் வரவில்லை என்றும், இன்று பஸ்கள் முழுமையாக இயங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றும் தென் மாகாணத்தில் பல பஸ்கள் இயங்க முடியாத நிலையில் இருப்பதாகவும், அரசாங்கத்திடம் இருந்து விரைவான பதிலை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.