நாவலப்பிட்டி ஹரங்கல பிரதேசத்தில் ரொஜர்சங்கமவிலிருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ்ஜொன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த மோட்டார் சைக்கிளொன்றின் கவனக்குறைவினால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

குறித்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க முற்பட்டதில் வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் தெய்வாதீனமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.