தனியார் நிறுவனங்களில் இருந்து அரசாங்கத்தினால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சுமார் 250 வாகனங்கள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றுக்கான மாதாந்த வாடகை செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் பற்றாக்குறையால் குறித்த வாகனங்கள் ஓடாமல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மாதாந்த வாடகை செலுத்தப்பட்டு வருகின்றது. இதில் ஒரு வாகனத்திற்கு குறைந்தபட்ச மாத வாடகை மட்டும் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, செலவுகளை கட்டுப்படுத்தவும், வாகனங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.