நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால், கொட்டக்கலை லொக்கில் தோட்டத்தில் உள்ள பல குடியிருப்புக்கள் நீரிழ் மூழ்கியுள்ளன.

மேற்படி தோட்டத்தில் உள்ள சுமார் 30 குடியிருப்புக்களைச் சேர்ந்த சுமார் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவரும் தற்காலிக குடியிருப்புக்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் மற்றும் ஆலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குடியிருப்பாளர்களின் வீட்டில் உள்ள உடமைகள் அனைத்தும் நீரினால் சேதமடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பில் தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவி தேசிய அமைப்பாளர் விஜயவீரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.