நீர்ப்பாசன வாய்க்காலுக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பமொன்று கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

நிசாற்தம் கபீசன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த குழந்தையின் வீட்டிற்கு அருகில் உள்ள இரணைமடு நீர்ப்பாசன வாய்க்கால் தற்போது சிறுபோக நெற்செய்கைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அதிகளவு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்குள் வீழந்த குழந்தை வீழந்த இடத்திலிருந்து ,இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் குறித்த குழந்தை உயிரிழந்த நிலையில் அயலவர்களினால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.