நீர் கட்டண பட்டியலை அச்சிடுவதற்கு எதிர்வரும் 3 மாதங்களுக்கு தேவையான கடதாசி பற்றாக்குறை இல்லமையினால் புதிய நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் பாவனையாளர்கள் தங்களுக்குரிய நீர் கட்டணப் பட்டியலை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்துகொள்ளுமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்காக 0719 399 999 என்ற இலக்கத்திற்கு நீர் கட்டண இலக்கத்தையும் மின்னஞ்சல் முகவரியையும் குறுஞ்செய்தி ஊடாக அனுப்பிவைக்குமாறும் குறித்த சபை கேட்டுக்கொண்டுள்ளது.