நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் நுவரெலியா பிரதேசத்தில் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன
அத்துடன் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பல பகுதிகளில் மரங்கள் வீதிகளில் முறிந்து விழுந்துள்ளதுடன், மண்மேடுகளும் சரிந்துள்ளன.
மலையகத்தில் தொடர்ந்து மழையுடனான காலநிலை நிலவுவதால் நுவரெலியா மாவட்டத்தில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது இதனால்  சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
குறிப்பாக  ஹட்டன் நுவரெலியா ,வெலிமட, கண்டி வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்தோடு வாகன முகப்பு  விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
செ.திவாகரன்