இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படடு இன்று 156 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
 இதனை முன்னிட்டு பல சமூக ,சமய நிகழ்வுகளுடன் நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலையத்தில் பல நிகழ்வுகள் சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நுவரெலியாவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
புத்தி யூ உடுகமசூரிய , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும்  குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோர்  கலந்துகொண்டனர் . இதில் நாட்டுக்காக உயிர் நீர்த்த பொலிஸ் வீரர்களை நினைவு கூர்ந்தமை குறிப்பிட்டத்தக்கது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உயிர்நீத்த  பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவினர்கள் , ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
செ.திவாகரன் – நானுஓயா.