நுவரெலியாவில் இன்று ஆறு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஒரே மேடையில்

0
387

நடனக்கலைஞர் ஆசிரியர் நாட்டிபூசண் ரமேஸ் காந்தை குருவாகக் கொண்ட ஆறு மாணவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஒரே மேடையில் இடம்பெறவுள்ளது. 

நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தில்  இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், பிரதீஸ் குமார் செல்லதுரை- (Global Artd Academy Uk) பிரதம அதிதியாகவும் யாழ். சிவாஞ்சலி நாட்டியாலயாவின் பணிப்பாளர் சசிகலா கேதீஸ்வரன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளனர். 

இந்நிகழ்வில், மகேஸ்வரன் சாம்பவி, முருகையா திலுக்ஷி, பரமெஸ்வரன் கௌசிகா, சிவகுமாரன் கேஷிகா, சௌந்தராஜ் சக்தி, திருகுமார் லக்ஸனா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றமே இடம்பெறவுள்ளது. 

நுவரெலியாவை பிறப்பிடமாக கொண்ட ஆசிரியர்  ரமேஷ் காந்த் யாழ் . பல்கலைக்கழகத்தில் B.F.A பட்டப் படிப்பினை நிறைவு செய்து பட்டம் பெற்று அண்ணாமலை கல்வியகத்தில் முதுமானி கற்கை நெறியை நிறைவு செய்து முதுமானி பட்டம் பெற்று நாட்டிய பூஷன் பரிட்சையை லண்டனில் நிறைவு செய்து நாட்டிய பூஷன் விருது பெற்று நாட்டிய திலகத்தினை கிரிப்டன் கல்லூரியில் நிறைவு செய்து பரதக்கலாலயாவின் எனும் நாட்டிய கலையகத்தை ஆரம்பித்து அதனூடாக பல மாணவர்களை உருவாக்கி வருகின்றார்.

 

நூரளை – ரமணன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here