நுவரெலியாவில் இருந்து தப்பிச் செல்ல முயன்றவரும் கைது

0
435

அவுஸ்திரேலியாவுக்குச் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற 35 பேரில் நுவரெலியாவைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாகவும் அவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

பாணந்துரை பிரதேசத்திலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் வைத்தே இவர்களை கைது செய்யப்பட்டுள்ளனார். அதில் ஆண்கள் 25 பேர், பெண்கள் நால்வர் மற்றும் சிறுவர்கள் அறுவரும் அடங்குகின்றனர்.

திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கற்பிட்டி மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 6 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவருகிறது. ஆட்கடத்தல் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஐவரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here