நுவரெலியா-ஆவேலியா பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான வாவியில் இருந்து டி-82 ரக கிரேனைட் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தொழிலாளி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த கைக்குண்டு கண்டறியப்பட்டது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றை நுவரெலியா நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவின் பின்பு இந்த கைக்குண்டை செயலிழப்பதா அல்லது பாதுகாப்பு தரப்பினரிடம் கையளிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

சந்தேகநபர் யாரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.