நுவரெலியா – வலப்பனை – மஹ ஊவா பிரதேசத்தில் பகுதியில் பஸ் ஒன்று வீதியில் குடைசாய்ந்து 27 பேர் காயமடைந்த நிலையில் இதில் பலத்த காயம் ஏற்பட்ட 6 பேர்  நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்
மட்டக்களப்பிலிருந்து திருமண வைபவம் ஒன்றில்  கலந்து கொள்ள  உடப்புஸ்ஸல்லாவ பகுதிக்கு சென்றிருந்த பஸ் ஒன்றே மீண்டும் மட்டக்களப்பிற்கு திரும்பிசெல்லும் வழியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து தொடர்பாக வலப்பனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

செ.திவாகரன்