நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கடும் மழையினால் 254 குடும்பங்களைச்சேர்ந்த 648 பேர் நிர்கதியாக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.
இச்சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நான்கு பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் உறவினர்கள் வீடுகளிலும் தற்காலிக இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடுபங்களுக்கு நட்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா, தலாவாக்கலை ஆகிய பகுதியிலேயே அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டி.சந்ரு